என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா அணி"
கடந்த 2009-ல் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருந்தது. அதன்பின் தற்போது இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து சிறந்த அணி என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தற்போதுள்ள நியூசிலாந்து அணி உண்மையிலேயே ஆஸ்திரேலியாவை விட சிறந்த அணி. ஆனால், இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை மறந்து விடக்கூடாது. சில நேரங்களில் மற்ற அணிகள் எப்படி சிறப்பாக விளையாடுகிறது என்பதை பார்க்கிறோம். ஆனால், சொந்த அணியின் சிறப்பான ஆட்டத்தை மறந்து விடுகிறோம். நம்முடைய அணிக்கு இணையாக எந்த அணியும் இல்லை.
நம்முடைய அணி விளையாடுவதை பார்க்கையில் மிகவும் சிறப்பாக உள்ளது. ஒவ்வொருவரும் நல்ல பார்மில் உள்ளனர். முகமது ஷமி பற்றி பேச நான் விரும்புகிறேன். அபாரமாக பந்து வீசும் அவரைப் போன்ற ஒருவர் உலகக்கோப்பை அணிக்குத் தேவை. விக்கெட்டுக்கள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றதை பார்க்கையில் சிறப்பாக இருந்தது. நியூசிலாந்து அணி சிறந்த அணி. ஆனால் இந்தியா மிகவும் சிறப்பான அணி’’ என்றார்.
இந்திய அணி கடந்த 11 ஒருநாள் தொடரில் 10 தொடர்களை வென்றுள்ளது. ஆனாலும் 4-வது வரிசையில் விளையாடும் திடமான வீரர் குறித்து இன்றும் முடிவுக்கு வந்த பாடில்லை.
கடந்த அக்டோபரில் அம்பதி ராயுடு 4-வது வரிசையில் களம் இறங்க கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரோகித் சர்மா சமீபத்தில் பேசும்போது, “டோனிதான் 4-வது வீரர் வரிசைக்கு பொருத்தமானவர்” என்று அவரது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். இதேபோல் தினேஷ் கார்த்திக்கும் அந்த வரிசையில் நன்றாக ஆடக்கூடியவர்.
உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு 4-வது வரிசையில் விளையாடும் வீரர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தநிலையில் 4-வது வீரர் வரிசை குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-
கடந்த 6 போட்டிகளை வைத்து பார்க்கும்போது (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) 4-வது வரிசையில் ஆடும் வீரரை திடப்படுத்த வேண்டியுள்ளது. அம்பதி ராயுடு நன்றாக விளையாடும்போது அவர்தான் சரி என்ற நம்பிக்கை வருகிறது.
தினேஷ் கார்த்திக்கும் நல்ல நிலையில் இருக்கிறார். தேவைப்பட்டால் அவரை 4-வது வரிசையில் இறக்கலாம். மிடில் ஆர்டரை மாற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் நம்பிக்கையுடன் ஆடுவார். டோனி பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். ஆகவே அனைவரும் நல்ல நிலையில் இருப்பதால் 4-வது வீரர் வரிசைப்பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை.
நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்காமல் தொடர்ந்து தீவிரமாக விளையாட வேண்டும். பந்துவீச்சில் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் நல்ல நிலையில் உள்ளனர். ஹர்த்திக் பாண்டியாவும் நன்றாக வீசினார். குல்தீப் யாதவ், சாஹல் தரமான பந்து வீச்சாளர்கள். ஒட்டு மொத்தமாக வீரர்களின் செயல்பாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தோல்வியையே சந்திக்காமல் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. கடைசி ஆட்டத்திலும் வெற்றியை ருசித்து தங்களது பிரிவில் முதல் இடத்தை பிடிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும். மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் வலுமிக்கது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சுழற்பந்து வீச்சில் மிரட்டக்கூடியது. இரு அணியிலும் திறமையான வீராங்கனைகள் அங்கம் வகிப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 3 முறையும், ஆஸ்திரேலிய அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘அரைஇறுதியை உறுதி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் இன்னும் சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக ஆட வேண்டும்’ என்றார்.
இந்திய துணை கேப்டன் மந்தனா கூறுகையில் ‘இந்த போட்டி தொடரில் எல்லா ஆட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி காண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமாகும். அடுத்த ஆட்டத்திலும் எங்களது இந்த மனநிலையில் மாற்றம் இருக்காது. முதல் 2 லீக் ஆட்டங்களில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது லீக்கில் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’ என்றார். #WomenWorldT20 #India #Australia
லண்டன்:
விராட்கோலி தலைமையிலானா இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடர் 12-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி முடிகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மார்கன் தலைமையில் 14 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாத ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ்லோக்ஸ் தேர்வு செய்யப்படவில்லை.
14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:-
இயன் மார்கன் (கேப்டன்), மொய்ன்அலி, பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் படயர் ஜேக்பால், அலெக்ஸ் ஹொல்ஸ், புளுங்கட், ஆதில் ரஷித், ஜோரூட், ஜேசன் ராய், டேவிட் விஸ்லி, மார்ருவுட், டாம்குர்ரன். #INDvsENG
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்